கியா காரென்ஸ் (Kia Carens)

கியா காரென்ஸ் (Kia Carens)

கியா காரென்ஸ் எம்பிவி கார் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு 2022 மார்ச் மாதத்திற்கு உள்ளாக காரென்ஸ் விற்பனைக்கு வரஉள்ளது. 

கியா காரென்ஸ் 

கியா காரென்ஸ் பிரத்யேகமாக இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. கியா காரென்ஸ் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் உடன் வர உள்ளது. 

கியா காரென்ஸ் எம்பிவி கார், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வெளிவர உள்ளது. இந்த என்ஜின் 115 எச்பி பவரையும் 114 என்எம் டார்க்கையும் உருவாக்க கூடிய திறன் உடையது. இந்த என்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வர உள்ளது.

Kia Carens



இது தவிர 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 140 எச்பி பவரையும் 242 என்எம் டார்க்கையும் உருவாக்க கூடிய வேரிஎண்டும் வர உள்ளது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 எச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் உருவாக்க கூடிய திறன் உடையது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்  கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.


கியா காரென்ஸ்  ஹூண்டாய் அல்காஸரைப் போலவே க்ரெட்டா/செல்டோஸ் இயங்குதளத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. காரென்ஸ்-ன் நீளம் 4,540mm, அகலம் 1,800mm, உயரம் 1,700mm மற்றும் 2,780mm வீல்பேஸ் கொண்டுள்ளது. செல்டோஸுடன் ஒப்பிடும்போது, கேரன்ஸ் 225மிமீ நீளமும், 80மிமீ உயரமும், வீல்பேஸ் 160மிமீ நீளமும் கொண்டது.

இந்த புதிய கியா காரென்ஸ்-ன் உத்தேச விலை ரூ: 16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)


கியா காரென்ஸ் இன்டீரியர் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.