ஓலா எஸ்1 (Ola S1)
ஓலா நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை இந்தியாவில் தொடங்கி உள்ளது, இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அனால் இந்நிறுவனம் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரியில் தான் தனது எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை தொடங்கி உள்ளது என்பது நிறைய பேருக்கு தெரியாது. இந்நிறுவனத்தில் தற்பொழுது இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன OLA S1 மற்றும் OLA S1 Pro. இப்போது நாம் எஸ் 1 ரிவியூவ் பார்க்க போகிறோம்.
| OLA S1 & OLA S1 Pro |
இந்த புதிய OLA S1 அதிகபட்சமாக 90 km/h வேகத்தில் செல்லக்கூடியது, இதில் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு மோடு உள்ளது. மேலும் 0-40km/h வேகத்தை எட்ட வெறும் 3.6 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது, 0-60km/h வேகத்தை எட்ட வெறும் 7 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதன் மோட்டார் 8.5kW பீக் பவர் மற்றும் 58Nm டார்க் உருவாக்க கூடியது.
| OLA Electric Motor |
மேலும் இதில் 2.98kWh திறனுடைய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இதனுடன் 750W திறனுடைய போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதில் Non-Removable பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இதில் உள்ள பேட்டரியை பிரித்து எடுக்க இயலாது. போர்ட்டபிள் சார்ஜரில் சார்ஜ் ஏற்றும்பொழுது 100% எட்ட 4 மணி நேரம் 48 நிமிடம் ஆகிறது என்றும், பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் ஏற்றும் பொழுது 18 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 75km வரை பயணிக்கலாம் என்று நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
| Fast Charging Station |
Dimensions
OLA S1 ன் எடை 121kg மற்றும் இதன் பூட் ஸ்பேஸ் 36 லிட்டர் கொள்ளளவு உடையது இதில் இரண்டு ஹெல்மேட்களை வைக்க முடியும். இதன் வீல் பேஸ் 1359mm கிரவுண்ட் கிளியரன்ஸ் 165mm.
- நீளம் - 1859mm
- அகலம் - 712mm
- உயரம் - 792mm
Brakes & Suspension
முன் பக்கம் சிங்கள் போர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வீலிலும் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் பொறுத்த பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் 110/70 - R12 டயர், அலுமினியம் அலாய் வீலில் பொருத்தப்பட்டுள்ளது.
Features
- ரிமோட் லாக்
- போன் அழைப்புகள்
- சைடு ஸ்டாண்டு அலர்ட்
- வைபை / ப்ளூடூத் / GPS
- நேவிகேசன்
- ரிவர்ஸ் மோட்
- வெல்கம் ஸ்கிரீன்
- ரோடு சைடு அசிஸ்டன்ஸ்
- ட்ராக் யூவர் வெஹிக்கிள்
- புக் சர்வீஸ்
- பைண்டு மை ஸ்க்கூட்டர்
இதன் விற்பனை கடந்த டிசம்பர் 15, 2021 அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. OLA S1 Ex-Showroom விலை ரூ: 99,999