ஹூண்டாய் கிரெட்டா 2022 (Hyundai Creta) அறிமுகம்

ஹூண்டாய் கிரெட்டா 2022 (Hyundai Creta)

இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் கிரெட்டா காரினை 2022-ல் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை கிரெட்டாவின் பேஸ்லிபிட்  மாடலாக இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் கிரெட்டா பார்க்கப்படுகிறது. 

New Creta 2022

புதிய கிரெட்டாவில் முன் பக்க பாராமெட்ரிக் கிரில் மிக அழகான தோற்றத்தை கொடுக்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள LED விளக்குகள் இதன் கிரில் போன்ற அமைப்புடன் இருப்பதால், காரிற்கு மிகவும் கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. மாற்றங்களுடன் கூடிய புதிய LED பனி விளக்குகள்

2022 New Creta Side View

பக்கவாட்டில் பெரிதா எந்த மாற்றமும் இல்லை, புதிய டிசைனில் அலாய் வீல்கள், பின்புற டைல் விளக்குகள் சிறிய மாற்றங்களுடன் கூடிய LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டீரியரில் 8" டிஜிட்டல் கிளஸ்ட்டர், 10.25" டச் ஸ்கிரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் BlueLink கனெக்ட் தொழில்நுற்பதுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளது.

2022 New Creta Digital Instrument Cluster

புதிதாக இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள கிரெட்டாவில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 115hp பவர் மற்றும் 144Nm டார்க் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இதில் 6- ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கவுள்ளது. மிக விரைவில் இந்தியாவில் இதன் விற்பனையை பார்க்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.