அதிக தூரம் செல்லக்கூடிய Tata Nexon EV 2022-ல் விற்பனைக்கு வரவுள்ளது

அதிக தூரம் செல்லக்கூடிய Tata Nexon EV 2022-ல் விற்பனைக்கு வரவுள்ளது 

மிகப்பெரிய மாற்றங்களுடன் Tata Motors, Nexon EV மடல் காரை அடுத்த வருடம் களமிறக்க உள்ளது. அதாவது பெரிய பேட்டரி மற்றும் அதிக தூரம் பயணிக்கும் திறனுடைய கார்களை தயாரிக்க உள்ளது. இதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.


Tata Nexon EV


இந்த புதிய Nexon EV-ல் அதிக திறனுடைய 40kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது தற்பொழுது விற்பனையில் இருக்கும் 30.2kWh பேட்டரி திறனுடைய Nexon EV-யை விட 30 சதவிகிதம் அதிகமாகும். இதன் காரணமாக புதிய Nexon EV-ன் எடை 100கி வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



அதிக திறன் கொண்ட பேட்டரி அதிகாரப்பூர்வ சோதனையில் 400கிமீ-க்கு மேல் வரம்பை அதிகரிக்கும் அதே வேளையில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 300-320கிமீ வரம்பை எதிர்பார்க்கலாம். இது MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா EV ஆகியவற்றுக்கு இணையான வரம்பை வழங்க கூடியதாக இருக்கும்.


இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் தற்போது விற்பனையில் உள்ள Nexon EV உடன் புதிதாக வர இருக்கும் Nexon EV-உம் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் மாற்றங்களுடன் கூடிய புதிய இன்டீரியர், புதிய அலாய் வீல், எலெக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி  ப்ரோக்ராம் (ESP), 3-4 லட்சம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உத்தேச விலை 17 - 18 லட்சம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.