விற்பனைக்கு வந்தது புதிய (TVS Apache RTR 165 RP Launched)

விற்பனைக்கு வந்தது புதிய (TVS Apache RTR 165 RP)


TVS பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் ஸ்போர்ட்டியான மோட்டார் சைக்கிள் தயாரிப்பதில் பெயர் பெற்றுள்ளது மேலும் அப்பாச்சி சீரிஸில் RR  310 அதற்கு ஒரு உதாரணமாகும். தற்பொழுது TVS ரேஸ் பெர்பாமன்ஸ் பைக்கை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள முதல் TVS ரேஸ் பெர்பாமன்ஸ் பைக் Apache RTR 165 RP ஆகும். இதன் விலை ₹ 1.45 லட்சம் (எக்ஸ்.ஷோரூம்).

TVS Apache RTR 165 RP

டிசைன்

Apache RTR 160 4V யை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது, அனால் ராஸிங்கிற்காக சில மாற்றங்களை செய்துள்ளனர். அட்ஜஸ்ட் செய்து கொள்ளகூடிய வகையில் அமைக்கப்பட்ட கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், சிகப்பு அலாய் வீல்கள், கஸ்டமைஸ்டு ஸ்டிக்கர்கள், நீளமாக்கப்பட்ட ஸ்போர்ட்டியான டேங்க் மற்றும்  எரிபொருள் டேங்க்கில் உள்ள 15-ஆம் ஆண்டு Anniversary Logo. இதுபோன்ற பல மாற்றங்கள் தான் இந்த பைக்கை ரேஸ் பைக்கிற்கான ஒரு பார்வையை கொடுக்கிறது.

15-ஆம் ஆண்டு Anniversary Logo
15-ஆம் ஆண்டு Anniversary Logo

அம்சங்கள் (Features)

இதில் உள்ள சிறப்பம்சங்கள் 
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் 
  • 0 - 60 டைமர்  
  • டாப் ஸ்பீடு ரெக்கார்டர் 
முன் பக்கம் AHO LED ஹெட் லைட் மற்றும் பின்புறம் LED லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் பல தகவல்கள் உள்ளன. இதில் உள்ள மற்ற அம்சங்கள் அனைத்தும் Apache RTR 160 4V - ல் இருந்து கொண்டுவரப்பட்டவை ஆகும்.

Digital Instrument Cluster
டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர்

என்ஜின்

Apache RTR 165 RP ல் 164.9சிசி, சிங்கிள் சிலிண்டர், நான்கு வால்வு என்ஜின் 10,000 RPM ல் 19.2 bhp ஆற்றலையும், 8,750 RPM ல் 14.2 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் 35 சதவிகிதம் அதிகரிக்கப்பட்ட புதிய சிலிண்டர் ஹெட், 15 சதவிகிதம் பெரிய வாழ்வுகளையம் பெறுகிறது. மேலும் இந்த பைக் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வருகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 123km ஆகும்.

TVS Apache RTR 165 RP
TVS Apache RTR 165 RP

டயர் & பிரேக் 

முன் பக்கம் 90/90 R17 மற்றும் பின்பக்கம் 130/70 R17 டியூப் லெஸ் ரேடியல் டயர் பொருத்தப்பட்டுள்ளது. முன் பக்கம் 270mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் 240mm டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்ன் எடை 148kg  ஆகும்.

RTR 165 RP LED ஹெட் லைட்
RTR 165 RP LED ஹெட் லைட் 
லிமிடெட் எடிஷன் 

TVS Apache RTR 165 RP ஒரு Limited Edition ஆகும். இந்தியாவில் மொத்தம் வெறும் 200 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய உள்ளது. 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.