ஓலா எஸ்1 ப்ரோ (OLA S1 Pro)
சென்ற பதிவில் நாம் OLA S1 பற்றி பார்த்தோம், இந்த பதிவில் OLA S1 Pro பற்றி பாப்போம்.
இந்த புதிய OLA S1 Pro அதிகபட்சமாக 115 km/h வேகத்தில் செல்லக்கூடியது, இதில் நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று மோடுகள் உள்ளது. மேலும் 0-40km/h வேகத்தை எட்ட வெறும் 3 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது, 0-60km/h வேகத்தை எட்ட வெறும் 5 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதன் மோட்டார் 8.5kW பீக் பவர் மற்றும் 58Nm டார்க் உருவாக்க கூடியது.
| OLA Electric Motor |
மேலும் இதில் 3.97kWh திறனுடைய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இதனுடன் 750W திறனுடைய போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதில் Non-Removable பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இதில் உள்ள பேட்டரியை பிரித்து எடுக்க இயலாது. போர்ட்டபிள் சார்ஜரில் சார்ஜ் ஏற்றும்பொழுது 100% எட்ட 6 மணி நேரம் 30 நிமிடம் ஆகிறது என்றும், பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் ஏற்றும் பொழுது 18 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 75km வரை பயணிக்கலாம் என்று நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
| Disc Brake |
Dimensions
OLA S1 Pro ன் எடை 125kg மற்றும் இதன் பூட் ஸ்பேஸ் 36 லிட்டர் கொள்ளளவு உடையது இதில் இரண்டு ஹெல்மேட்களை வைக்க முடியும். இதன் வீல் பேஸ் 1359mm கிரவுண்ட் கிளியரன்ஸ் 165mm.
- நீளம் - 1859mm
- அகலம் - 712mm
- உயரம் - 792mm
Brakes & Suspension
முன் பக்கம் சிங்கள் போர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வீலிலும் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் பொறுத்த பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் 110/70 - R12 டயர், அலுமினியம் அலாய் வீலில் பொருத்தப்பட்டுள்ளது.
Features
- ரிமோட் லாக்
- போன் அழைப்புகள்
- சைடு ஸ்டாண்டு அலர்ட்
- வைபை / ப்ளூடூத் / GPS
- நேவிகேசன்
- ரிவர்ஸ் மோட்
- வெல்கம் ஸ்கிரீன்
- ரோடு சைடு அசிஸ்டன்ஸ்
- ட்ராக் யூவர் வெஹிக்கிள்
- புக் சர்வீஸ்
- பைண்டு மை ஸ்க்கூட்டர்